search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹிஜாப் விவகாரம்"

    • பொது இடத்தில் அவர் ஹிஜாப் அணியாததால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
    • 2 ஆண்டுகள் அவர் சமூக வலைதளங்களை பயன்படுத்தவும், நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டது.

    தெக்ரான்:

    ஈரானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஈரானில் பிரபல நடிகையான அப்ச ஹென் பாபேகன் என்ற 61 வயது நடிகை ஒரு திரைப்பட விழாவுக்கு ஹிஜாப் அணியாமல் சென்றார். அவர் குல்லா அணிந்து இருந்தார். இது தொடர்பான புகைப் படங்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொது இடத்தில் அவர் ஹிஜாப் அணியாததால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு நடிகை அப்சஹென் பாபேகனுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. மேலும் 2 ஆண்டுகள் அவர் சமூக வலைதளங்களை பயன்படுத்தவும், நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு மனநிலை சரியில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்து உள்ளதால் வாரந்தோறும் அவருக்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    • மாஷாவின் மரணத்தால் ஈரானில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது.
    • போலீசாரின் இந்த திடீர் கட்டுப்பாடுகளால் ஈரானில் மீண்டும் போராட்டம் வெடிக்குமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தெக்ரான்:

    ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று சிறப்பு படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    போலீஸ் விசாரணையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தார். மாஷாவின் மரணத்தால் ஈரானில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. ஹிஜாப்பை எரித்தும் முடியை வெட்டியும் பெண்கள் போராட்டம் நடத்தினர்.

    ஆனால் போலீசார் தாக்கியதால் அவர் உயிரிழக்கவில்லை என்றும் உடல் நலக்குறைவால் தான் அவர் உயிரிழந்தார் என்றும் ஈரான் அரசு தெரிவித்தது.

    இதை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். நாடு முழுவதும் நடந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 25 ஆயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதையடுத்து ஈரான் அரசு பெண்களுக்கு விதித்த கடுமையான நிபந்தனைகளை தளர்த்தியது. போலீசார் கண்காணிப்பை கைவிட்டதால் அமைதி திரும்பியது.

    இந்த நிலையில் மீண்டும் சிறப்பு படை போலீசார் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். சாலையில் வரும் பெண்கள் ஹிஜாப்பை முறையாக அணிந்து வர வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஹிஜாப் சரியாக அணியாமல் வெளியே வரும் பெண்கள் முதலில் எச்சரிக்கப்படுவார்கள். தொடர்ந்து இதே போல் அடுத்த முறையும் அவர்கள் வெளியே ஹிஜாப் அணியாமல் வந்தால் கைது செய்யப்பட்டு நீதித்துறை முன்பு நிறுத்தப்படுவார்கள் என்றார்.

    போலீசாரின் இந்த திடீர் கட்டுப்பாடுகளால் ஈரானில் மீண்டும் போராட்டம் வெடிக்குமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி கைதுசெய்யப்பட்ட இளம்பெண் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.
    • போலீஸ் தாக்குதலில் இளம்பெண் இறந்ததற்கு எதிர்த்து ஈரான் பெண்கள் தலைமுடியை வெட்டி போராட்டம் நடத்தினர்.

    பெல்ஜியம்:

    இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாகப் பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, அந்நாட்டின் தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கோமா நிலைக்குச் சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த மாதம் 17-ம் தேதி உயிரிழந்தார். இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவிய நிலையில் போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு முயற்சித்து வருகிறது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், ஈரான் நாட்டில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக சுவீடன் எம்.பி. தனது தலைமுடியை வெட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஈரானிய பெண்களுடனான தனது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பாராளுமன்ற விவாதத்தின் போது ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது தலைமுடியை கத்தரித்துக் கொண்டார்.

    அப்போது பேசிய அவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமக்கள் அனைவரும் ஈரானில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என கோருகிறோம் என்றார்.

    • ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி கைதுசெய்யப்பட்ட இளம்பெண் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.
    • போலீஸ் தாக்குதலில் இளம்பெண் இறந்ததற்கு எதிர்த்து ஈரான் பெண்கள் தலைமுடியை வெட்டி போராட்டம் நடத்தினர்.

    டெஹ்ரான்:

    ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி கைது செய்யப்பட்ட இளம்பெண் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். சரியாக ஹிஜாப் அணியாததால் மஹ்சா அமினி என்ற 22 வயது இளம்பெண்ணை கைது செய்த காவல் துறையினர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்குச் சென்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நடந்தது. எனினும், இளம்பெண் காவலில் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர்.

    இதுகுறித்து அமெரிக்க நடிகையும் நாவலாசிரியருமான லியா ரெமினியின் டுவீட் காரணமாக, ஹிஜாப் அணியாத ஈரானியப் பெண்களுக்கு எதிரான வழக்கு மற்றும் அரசு நிர்வாகத்தின் வன்முறை ஆகியவை உலகின் கவனத்தைப் பெற்றன. அதன்பின், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பெண்கள் பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    இந்நிலையில், பெண்கள் போராட்டம் தொடர்பாக ஈரானிய பத்திரிகையாளரும் ஆர்வலருமான மசிஹ் அலினெஜாட் டுவிட்டரில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    ஹிஜாப் போலீசாரால் மஹ்சா அமினி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, ஈரானிய பெண்கள் தலைமுடியை வெட்டியும், ஹிஜாபை எரித்தும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். 7 வயதில் இருந்து பெண்கள் நாங்கள் எங்கள் முடியை மறைக்கவில்லை என்றால் பள்ளிக்குச் செல்ல முடியாது, வேலையும் கிடைக்காது. இந்த பாலின வெறி ஆட்சியால் நாங்கள் சோர்வடைகிறோம்.

    அமைதியான போராட்டக்காரர்கள் மீது ஈரானின் சக்சேஸ் பகுதியில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பல போராட்டக்காரர்கள் காயமடைந்துள்ளனர். முதலில் போலீசார் 22 வயது பெண்ணை கொன்றனர், இப்போது போராட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கிகள் மற்றும் கண்ணீர் புகைகுண்டுகளைப் பயன்படுத்துகின்றனர் என பதிவிட்டுள்ளார்.

    • வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    • கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு.

    கர்நாடகா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் எனப்படும் மத அடையாள ஆடைகளை அணிந்து செல்வதற்கு மாநில அரசு தடை விதித்தது. இந்த தடையை கர்நாடகா உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. உப்பினங்கடி கல்லூரியில் தடையை மீறி ஹிஜாப் அணிந்து வந்த 24 மாணவிகளை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது. உடுப்பியில் உள்ள அரசுப் பல்கலைக்கழகத்தின் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    மாநிலத்தின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் இன்று நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் அளிக்கக் கோரி கர்நாடகா அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை செப்டம்பர் 5ஆம் தேதி நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

    • புத்தூர் தாலுகாவில் உள்ள உப்பினங்கடியில் இருக்கும் கல்லூரியில் 24 மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தினர் உத்தரவை மீறி ஹிஜாப் அணிந்து வந்தனர்.
    • இதையடுத்து ஹிஜாப் அணிந்து வந்த 24 மாணவிகளையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்துள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து மாநில அரசும், கர்நாடகா ஐகோர்ட்டும் பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் மத அடையாள ஆடைகளை அணியக் கூடாது என்று உத்தரவிட்டது.

    இந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளது.

    புத்தூர் தாலுகாவில் உள்ள உப்பினங்கடியில் இருக்கும் கல்லூரியில் 24 மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தினர் உத்தரவை மீறி ஹிஜாப் அணிந்து வந்தனர்.

    இதையடுத்து ஹிஜாப் அணிந்து வந்த 24 மாணவிகளையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்துள்ளது. ஒரு வாரம் அவர்கள் கல்லூரிக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ×